7ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தீபிகா சண்முகப்பிரபா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்புச் செல்வமே...
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுக்கு
ஆறுதலாய் இருப்பாய் என்றிருந்தோம்!
அத்தனையும் நீ கனவாக்கி
எங்கு சென்றாய் செல்லமே!
கண்மூடி விழிப்பதற்குள்
கணப்பொழுதில்
நடந்தவைகள் நிஜம்
தானா என்று
நினைக்கும் முன்னே
மறைந்தது ஏனோ?
வாழ்க்கையை தொலைத்து
வாழ வேண்டிய வயதில்
உன் உயிரைக் கொடுத்து - எம்மை
தவிக்க விட்டுவிட்டாய்...
உன்னை பிரிந்தே எங்கள்
உள்ளம் வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும் உன்னைத்
துரத்தித் தேடுதே!...
உன் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்.........
தகவல்:
குடும்பத்தினர்
Your soul has got a new life and now you are 7 years old and you are living a wonderful happy life here in this universe Dear...