Clicky

8ம் ஆண்டு நினைவஞ்சலி
மலர்வு 13 MAR 2007
உதிர்வு 25 JUN 2015
அமரர் தீபிகா சண்முகப்பிரபா
வயது 8
அமரர் தீபிகா சண்முகப்பிரபா 2007 - 2015 Toronto, Canada Canada
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தீபிகா சண்முகப்பிரபா அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.

நேற்றுவரை எம்மோடு இருந்த தீபிகா இன்று
காற்றோடு கலந்து கனவாகிப்போய் ஆண்டு எட்டு
வந்தும் ஆறமுடியவில்லை!

அந்தோ அன்னக் கிளிபோன்ற
அழகிய மகளே தீபி

உந்தன் பிரிவால் இன்றும்நாம்
ஒவ்வொரு கணமும் துடிக்கின்றோம்!

உன்னைப் பிரிந்த நாள் முதல் இன்று வரை,
உன் அன்பிற்கு இணை யாருமில்லை
உன் பாசத்திற்கு ஏங்கும் எங்கள் ஏக்கங்கள்
உணர முடியாத வலியாய் எங்களை கொல்கிறது !

உன்னழகு வதனம் காணாத
எம்மனம் நாளுமேங்கி நில விழந்த
வானமென இருண்டு கிடக்குதம்மா!

விழிகள் சொரிகிறது
நிரப்ப முடியா வெற்றிடத்தை உருவாக்கி
எம்மை நிலைதடுமாற வைத்து
எங்கு சென்றாய்?

உன் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
பிரிவால் துயருறும் குடும்பத்தினர்.

எமது செல்வப் புதல்வியின் 8வது ஆண்டு ஞாபகார்த்த நடைபயன நிகழ்வு 25.06.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் Rouge National Urban Park, 6994 19th Ave, Markham, ON L6B 1A8, Canada எனும் முகவரியில் இருந்து ஆரம்பமாகும்.

  
தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices