யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை, கனடா Brampton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தியோகுப்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 27-08-2022 சனிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் Sri Katpaga Vinayagar Thirumana Mandapam, 200 Advance Blvd Brampton, ON L6T 4V5, Canada எனும் முகவரியில் நடைபெறும். இந் நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயருறும் அனைவரோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்துகொள்வதோடு, ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்