Clicky

மண்ணில் 17 DEC 1936
விண்ணில் 23 DEC 2018
அமரர் திலகம் செல்வமணி வடிவேலு
ஆசிரியை, அதிபர், ஆங்கில கல்வி பணிப்பகத்தின் துணை இயக்குனர் - திருகோணமலை மற்றும் ஆசிரியை - Braintcroft Primary பாடசாலை, London Tamil Centre
வயது 82
அமரர் திலகம் செல்வமணி வடிவேலு 1936 - 2018 திருகோணமலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 26 DEC 2018 United Kingdom

விண்ணில் கரைந்து போன எங்கள் ஆசாவே (அன்னையே) மண்ணில் உங்களுக்காக ஒரு கவிதை இதோ!... தாலாட்டு பாடாமலே எங்களுக்கு தாயானவள் நீங்கள் அன்று தாழாத துயரத்தில் எம்மை எல்லாம் விட்டு சென்றது ஏனோ இன்று? பார்த்ததில்லை நாங்கள் உம் போன்ற ஒரு பெண்மணியை எம் வாழ்வில் பார்க்கவும் போவதில்லை இனி ஒருவர் உம்மை போல் பின் நாட்களில்! கல்யாண சுகம் காணவில்லை நீங்கள் கடைமைக்கு முடிவும் இல்லை உங்களுக்கு எத்தனை எத்தனையோ உறவுகள் கொண்டீர்கள் எத்தனை எத்தனையோ கனவுகள் கண்டீர்கள்! புண்ணியங்கள் பலதும் செய்தீர்கள் அன்று புற்று நோயால் புண்பட்டு போனீர்கள் இன்று இது கடவுளின் கட்டளையா? இல்லை காலத்தின் கட்டாயமா? இல்லை விதியின் சதியா?? வியக்கின்றோம் நாங்கள் இன்று! நடந்து நடந்து களைத்த உங்கள் கால்கள் நடக்க மறுத்து ஓய்ந்தனவோ இன்று? கொடுத்து கொடுத்து ஓய்ந்த உங்கள் கரங்கள் இனி கொடுப்பதற்கு ஒன்றுமில்லை என்று மெலிந்து வலுவிழந்து போனதுவோ! மனிதர்கள் மரனிக்கலாம் ஆனால் மனிதம் மரனிப்பதில்லை - நம் மண்ணின் மங்கையே மனிதநேயத்துடன் நீங்கள் செய்த நற்பணிகளுக்கு மரனமே கிடையாது என்றும்! மண்ணை விட்டு நீங்கள் பிரிந்தாலும் - எம் மனதை விட்டு உங்கள் நினைவுகள் பிரிந்து போகுமா? கண்ணை விட்டு உங்கள் உடல் மறைந்தாலும் - எம் கனவை விட்டு உங்கள் உருவம் மறையுமா? இறுகிய இதயத்துடனும் நனைந்த விழிகளுடனும் உங்களுக்கு இவ்வரிகள் சமர்ப்பணம்! We always love you lots Asha and you will be missed. May your soul rest in peace ??? சர்மிளா, திருமளா, பிரமிளா