Clicky

மண்ணில் 17 DEC 1936
விண்ணில் 23 DEC 2018
அமரர் திலகம் செல்வமணி வடிவேலு
ஆசிரியை, அதிபர், ஆங்கில கல்வி பணிப்பகத்தின் துணை இயக்குனர் - திருகோணமலை மற்றும் ஆசிரியை - Braintcroft Primary பாடசாலை, London Tamil Centre
வயது 82
அமரர் திலகம் செல்வமணி வடிவேலு 1936 - 2018 திருகோணமலை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 02 JAN 2019 Sri Lanka

ஆசா ஆசா "இந்திய ஆசா " என்றும் "இலண்டன் ஆசா " என்றும் அன்புடன் அழைக்க இனிமேல் நீங்கள் இல்லையா? வறுமையில் நாம் வாடிய போது நீங்கள் உதவி செய்ய மறுக்க இல்லையே, கல்வி பாதையில் நாம் தடம் புரளும் போது நீங்கள் தட்டி கொடுக்க தவறில்லையே. நீங்கள் ஊர் எங்கு சென்று வந்ததாலும் எங்களை பரிசு மழையால் மகிழ்விக்க தவறியதில்லை. . "Banana Leaf" "சாந்தி விகார்" MC, Mc Donalds, KFC என்று எங்கெல்லாம் எமக்கு விருந்து தர மறப்பதில்லையே. பருவ கால குழப்படிகளில் நாம் சிக்கிய போது பாதை காட்ட தவறவில்லையே. ஆசா. .. இன்று 2019 இல் தை பிறந்தவுடன் உங்கள் இறுதி பயணமாம்... இறுதி மரியாதையை இறுதி வணக்கத்தை கூட அருகில் நின்று நிறைவேற்ற முடியாத அவல நிலையில் சொந்த மண்ணில் தவித்து நிற்கின்றோம். அடைக்கல நாட்டில் ஆங்கில மண்ணில் நிரந்தர ஓய்வெடுங்கள் ஆசா.. கோணேச பூமியில் பாத்திமா வீதியில் காத்து கிடக்கின்றோம் நாம் உங்கள் அன்பு வரவிற்காக..... உங்கள் வழி தடத்தில் உங்கள் நிழலில் வாழும் மகன் துரைராசா ரகுராம் -02.01.2019 .