திதி:22/01/2025
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல. 19, சிவபுரம், வவுனிக்குளத்தை வசிப்பிடமாகவும், கனடா Toronto, Ottawa ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த தில்லையம்பலம் அன்னலெட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா.....
அன்னை ஓர் ஆலயம் அதில்
அமர்ந்திருக்கும் தெய்வம் நீ!
பத்து மாதம் கருவறையில்
கலங்காமல் காத்தவள் நீ!
நீ விட்டுச்சென்ற
அழகான ஞாபகங்கள்
என்றுமே வெளுத்துக் கலைந்து போகாது
நீ தந்த சந்தோஷ தருணங்களிற்கு
வேறு எந்த உவமையும் இணையாய்
எங்களுக்கு விளைந்து போகாது
நீ இல்லாத உலகம் இருள் சூழ்ந்த
முழு வெறுமையை அன்றி வேறெதையும்
தந்து போகாது
ஆண்டுகள் எத்தனை போனாலும்
நீ எம்மோடு பேசிய கதைகள்
நம் நெஞ்சை விட்டு அகன்று போகாது
உன் நினைவுகள் தரும் கண்ணீர்
இவ்வுலகில் நாம் வாழும் வரை
வற்றிப் போகாது
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
இறைவனடி சேர எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்..!
Our deepest sympathies to your family. Hope all the good memories with her will guide you during this time of loss.