யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sargans ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லைநாதன் தயாபரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உன் அன்பான பேச்சும்
இரக்க உள்ளம் கொண்ட எண்ணமும்
உன் போல துணையாய்
யாருமில்லை இன்றுவரை
கனப்பொழுதில் கண்மூட
உன் இறுதி மூச்சு நின்றோட
நம்பமுடியவில்லை இன்றுவரை தயா
நீ இல்லாத வாழ்க்கையை!
முழு நிலவு போன்ற முகம்
முன் வந்து கலங்க வைக்க
மொத்தமாக தொலைந்து நின்றோம் தயா
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
உன் நினைவுகள்
என்றும்
நம்மை விட்டு நீங்காது தயா
உன் ஆத்மா சாந்தியடைய என்றும்
இறைவனைப் பிராத்திக்கின்றோம்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.