யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தில்லைநாதன் நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 09-12-2024
நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
இன்றுடன் ஓராண்டு முடிந்தாலும்!
கடந்துவிட்ட ஒருவருடத்தில்
கலங்காத நாட்களில்லை
நீங்கள் இருக்கும் போது
ஆனந்தக் கண்ணீர் தந்த விழிகள்
இப்பொழுது தூக்கம் தொலைத்து
கண்ணீர் வடிக்குதே அப்பா!
அளவில்லா அன்பையும்
அளக்க முடியாத பாசத்தையும்
அளவில்லாமல் கொடுத்து விட்டு
எங்கு தான் சென்றீரோ?
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியவில்லை அப்பா!
உங்கள் நினைவலைகள் எங்கள்
கண்முன்னே நிழலாடுகிறதே!
ஓராண்டு என்ன
எத்தனை ஆண்டுகள்
ஓடி மறைந்தாலும்
உங்கள் அன்பும் பாசமும்
என்றும்
எம் நினைவை விட்டு அகலாது
என்றும் உங்கள் நினைவுகளுடன்
வாழும் குடும்பத்தினர்...
தில்லை அண்ணா அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும். அன்னாரை பிரிந்து வாடும் அவரின் மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர் நண்பர்கள் யாவருக்கும் எமது அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கின்றோம்