யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், பின்னர் மொன்றியல் கனடாவில் வாழ்ந்தவருமான தில்லையம்பலம் பரநிருபசிங்கம் அவர்களின் 13ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் அடையாளச் சின்னம்
அரவணைப்பின் அழகு நிறை
உதாரணம்
அணுவளவும் கலப்படமில்லா
ஆழ்ந்த அன்பு....... !!
வெற்றிகளை மட்டுமே எமதாக்கிய விவேகம்.!
வாழ்க்கை முழுவதுமே எமக்கான அர்பணிப்பு...!
அன்பு தொடங்கி அர்பணிப்பு வரை
'அப்பா'
என்பதில் அடங்கி விட்டது.....!!!
காலத்தின் சக்கரங்கள் கடுகதியில்
சென்றாலும்
கடந்து வந்த பாதையிலே
நினைவலைகள் தொடரட்டும்
அல்லும் பகலும் ஓயாது உழைத்ததனால்
அமைதியில் ஓய்வெடுக்க
இறைவனடி சென்றீரோ
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம்முன்னே
உங்கள் முகம்எந்நாளும் உயிர்
வாழும் அப்பா!
என்றென்றும் உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர்.!!
Life takes a toll on everyone. He reigned and suffered. Always a legend. Hope you're resting well.