யாழ். கச்சேரியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, சுவிஸ் Bern Koniz, Boll vechigen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தேவசோதி நற்குணசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்புத் தாயார் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார் என்ற செய்தியைக் கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் எங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்கும் ஆறுதல் தெரிவித்த உங்கள் அனைவருக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்சாலைக்கு நேரில் வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், அன்புடன் மலர் அஞ்சலிகள் அனுப்பி வைத்தவர்களுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள், திருச்சபையார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.
உறவுகளிடத்தில் உண்மையுடனும் , தேவனிடத்தில் அன்புடனும் ,வாழ்ந்த எங்கள் பசமிகு மாமி நீங்கள் இப் பாரினை விட்டகன்றாலும், எம் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருப்பீரகள்....