Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 MAR 1941
இறப்பு 27 OCT 2019
அமரர் தேவராயப்பிள்ளை செல்லத்துரை
வயது 78
அமரர் தேவராயப்பிள்ளை செல்லத்துரை 1941 - 2019 Trichy, British Indian Ocean Terr. British Indian Ocean Terr.
Tribute 3 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

இந்தியா திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமம், சமயமந்திரி கோத்திரத்தைச் சேர்ந்தவரும், கம்பளைஇல.4/19, மலபார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவராயப்பிள்ளை செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஆயிரம் கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
பாசமழை பொழிந்து பரிவோடு
பக்குவமாய் வளர்த்த எமது அன்புத் தந்தையே!

அழகிய உங்கள் சிரிப்பெங்கே
இனிமையான அறிவுரையும், முத்து போன்ற
சிறந்த பேச்சுமெங்கே
காணத்துடிக்கிறது எம்மனம்
வாருங்களே அப்பா!

உழைப்பை உரமாக்கி
பாசமாய் பணிவிடைகள் பல செய்து
வாழ்க்கை எனும் பாடத்தை எமக்கு கற்றுத் தந்த
எமது உயிர் தந்தையே!

வாசம் குன்றா வாழ்வு தந்து
எமது வளர்ச்சிக்கு வழி காட்டிய தந்தையே!
உங்களைப்போல் இந்த உலகில் யார்
இருக்க முடியும் அப்பா!

உங்களின் பாசத்திற்கு அளவேயில்லை அப்பா!
எம் கவலைகளைச் சொல்வதற்கு
வார்த்தைகளே இல்லை!
அப்பா அப்பா என்று கூப்பிட ஏங்கிநிற்குது
எங்கள் மனம்!

வாருங்கள் அப்பா! எங்களை பாருங்கள் அப்பா
எங்களது எல்லா செயலுக்கும் வழிகாட்டுங்கள் அப்பா!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!    

என்றும் உங்கள் நினைவால் வாடும் குடும்பத்தினர்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 01 Nov, 2019
நினைவஞ்சலி Fri, 08 Nov, 2019