

இந்தியா திருச்சியைப் பிறப்பிடமாகவும், கம்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராயப்பிள்ளை செல்லத்துரை அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தேவராயப்பிள்ளை, மீனாட்சி தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்ற கந்தசாமிபிள்ளை, பாப்பம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுஷா(கொழும்பு), சதீஷ்குமார்(Ambro Electricals- கொழும்பு), லோகேஸ்வரன்(Sunshine Healthcare) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரமேஸ்(Deeca), பவித்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பெரியசாமிப்பிள்ளை(Decca - கொழும்பு), விஜயா, செல்வராஜ், புவனேஸ்வரி(குருதெனிய) ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,
லாவண்யா, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில்(இல - 4/19, மலபார் வீதி, கம்பளை) வைக்கப்பட்டு இறுதிக்கிரியை 30-10-2019 புதன்கிழமை அன்று ந.ப 12:30 மணியளவில் நடைபெற்று பின்னர் கம்பளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.