1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு பெருங்காடு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா புஸ்பவதி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உங்களை இழந்து ஆண்டொன்று ஆனாலும்
உங்கள் ஆசைமுகம், நேசப்புன்னகை மறையவில்லை
பாரினிலே ஒன்றாய் இருந்து கூடி மகிழ்ந்த
காலமெல்லாம் மறந்திடுமோ...
ஓராண்டு கழிந்தாலும்
ஓவியமாய் பதிந்திருக்கிறது
உங்கள் முகம்...
உங்கள் பிரிவால் வலிகள் தந்தவளே!
வசந்தத்தை தொலைத்து தூரமானிர்களே
உங்கள் புன்னகை காணாது தவிக்கிறோம்...
ஆண்டுகள் பல ஆனாலும் ஆறாது எம் துயரம்
நீங்காது அம்மா எம் மனதில் உங்கள் நினைவு
இன்னொரு பிறப்பு ஒன்று உண்டெனில்
உங்கள் பிள்ளைகளாக மட்டுமே நாம் பிறந்திட வேண்டும் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை வேண்டிநிற்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்