Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 14 JUL 1949
விண்ணில் 12 AUG 2021
அமரர் தேவராசா புஸ்பவதி 1949 - 2021 புங்குடுதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு பெருங்காடு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகரை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா புஸ்பவதி அவர்கள் 12-08-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தேவராசா(சிவன்) அவர்களின் அன்புத் துணைவியும்,

காலஞ்சென்றவர்களான அருளையா, யோகம்மா, நாகலிங்கம், கந்தையா, கிருஸ்ணபிள்ளை, பராசக்தி மற்றும் சற்குணம்(கனடா), கனகாம்பிகை(கனடா), பரிமளம், சண்முகவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஞானலட்சுமி, குகேந்திரராஜா(பிரான்ஸ்), யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சத்தியதேவன், சிறிதேவன்(ஆய்வுகூட உதவியாளர்- கிளி இந்துக் கல்லூரி), நிதிதேவன்(பொதுமுகாமையாளர் கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கம், கிளிநொச்சி), ரேணுகா(சுவிஸ்), சியாமளதேவன், றெஜிதேவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மேகலா, ஆயிஷா, மதிவதனி(முன்பள்ளி ஆசிரியை), மஞ்சுளா, குணசீலன்(சுவிஸ்), ரேணுகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜதூர்ஷன்(பிரான்ஸ்), லதுர்ஷன், கிதுர்ஷன்(பேராதனைப் பல்கலைக்கழகம், கண்டி), கிரன்ஜா(சுவிஸ்), டக்‌ஷயன், லோஜிகன், ஜதுர்ஷிகா, கோஜினா(மாணவி), துலக்‌ஷா- சுலக்‌ஷன், துலக்‌ஷன், டயந்தன், தக்‌ஷியா(சுவிஸ்), சனாட்ஜன்(சுவிஸ்), கயக்‌ஷன்(சுவிஸ்), லஸ்பினா(மாணவி), கிதுனா(மாணவி) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனன்ஜா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-08-2021 வியாழக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் உருத்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குகேந்திரராஜா - மைத்துனர்
சத்தி - மகன்
சிறி - மகன்
முகுந்தன் - மகன்
குணசீலன் - மருமகன்
ரேணுகா - மகள்
தேவன் - மகன்
ஜதூர்ஷன் - பேரன்

Photos

Notices