
யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவராசா அகத்தம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் அருமை மனைவியே
என்னையும், பிள்ளைகளயும் தவிக்கவிட்டு
பத்து ஆண்டுகள் சென்றன...
வாழ்நாள் முழுவதும் கூடவே
இருப்பேன் என்று கூறியது
பொய்யாகிப்
போனதே இன்று...
எங்களை தவிக்கவிட்டு
எங்கே சென்றுவிட்டாய்
எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எங்கள் மனம் உன்னைத்
தேடிக் கொண்டே இருக்கும்!!!
அம்மா நீங்கள் எங்களை விட்டு
அகலவில்லையம்மா
எங்களோடுதான் வாழ்கிறீர்கள் அம்மா...
பூவை விட்டு மணம் பிரியாது
நீரை விட்டு அலை பிரியாது
எம் இதயங்களை விட்டு என்றும்
பிரியாத தாய் நீங்களம்மா...
அன்று எங்கள் அழுகையின்
அர்த்தம் புரிந்த அகராதி
புத்தகம் நீயம்மா...
ஆயிரம் சொந்தங்கள் அணைத்திட
இருந்தாலும் உங்களை போன்று அன்பு
செய்ய யாரும் இல்லையம்மா இவ் உலகில்!!!
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
அன்னாரின் 10ம் ஆண்டு நினைவு திருப்பலி St. Mary's Cathedral Jaffna எனும் முகவரியில் மு.ப 05:45 மணியளவில் நடைபெறும்.