Clicky

9ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 JAN 1954
இறப்பு 17 MAY 2015
அமரர் தேவராசா அகத்தம்மா
வயது 61
அமரர் தேவராசா அகத்தம்மா 1954 - 2015 ஊர்காவற்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தேவராசா அகத்தம்மா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.  

எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
உங்களின் அரவணைப்பின்றித்
 தவிக்கின்றோம் நாங்களிங்கே!

எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
 அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
 உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
 எல்லாம் பொற் காலங்கள் தான்!
 வருடங்கள் பல உருண்டோடினாலும்- உன்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா
 வருகின்ற நல்ல நாட்களிலெல்லாம்- உன்
நினைவுகள் கண்ணில் நீர் சேர்க்குதம்மா
 ஆண்டுகள் பல ஆனால் என்ன?
அடுத்த பிறவி பிறந்தால் கூட
எங்கள் அன்னை நீ தானம்மா!

கணவன் மனக்குமுறல்
என்னவளே என் இனியவளே!
உன்னோடு நான் வாழ்ந்த வாழ்க்கை
என் வாழ்வில் நான் இழந்த இந்த இழப்பை
இறைவன் என் வாழ்நாள் முழுவதும்
தாங்க முடியாமல் செய்துவிட்டான்!

தனி மரமாக விட்டு ஏன் அவசரமாக சென்றுவிட்டாய்
இவ்வளவு தான் நம் வாழ்க்கை என்று
காலம் நினைத்துவிட்டதா?

காலங்கள் உருண்டு போனாலும்
கண்முன்னே நிழலாகும் உன் நினைவுகள்
ஒரு போதும் என்னை விட்டு அகலாது! 

பேரப்பிள்ளைகளின் மனக்குமுறல்

அப்பப்பா,அம்மம்மா என்ற
 சொல்லின் சூட்சமம் நீங்கள்,
குடும்பத் தலைவியாய்,
எங்களுக்கு வழிகட்டியாய்
 நீங்கள் இருந்தீர்கள்..!

நாங்கள் எங்கே எப்படி
 வாழ்ந்தாலும் நீங்கள் எங்கள்
ஒளி விளக்கு 9.
ஆண்டு ஓடி ஒழிந்தது..!

உங்களின் ஆத்ம இளைப்பாற
இறைவனை வேண்டுகிறோம்..! 

தகவல்: குடும்பத்தினர்