கிளிநொச்சியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris நகரை வதிவிடமாகவும் கொண்ட தேவகி செல்வநாயகம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச் செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், சமூக வலைத்தளங்களினுடாகவும் எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள் மற்றும் பூச்செண்டுகள் அனுப்பியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள், மேலும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு உள்ளங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியும் மதியபோசன நிகழ்வும் 22-03-2025 சனிக்கிழமை அன்று 138 Av. Aristide Briand, 93320 Les Pavillons-sous-Bois எனும் முகவரியில் நண்பகல் 12.30 தொடக்கம் 3.00 மணிவரைக்கும் நடைபெறவுள்ளதால் தாங்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Our thoughts and prayers go to you and your loved ones. May her soul rest in peace.