Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 APR 1950
இறப்பு 25 AUG 2023
அமரர் தெய்வானை வினாசித்தம்பி (மாது)
வயது 73
அமரர் தெய்வானை வினாசித்தம்பி 1950 - 2023 பளை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பளை புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், இந்தியா சென்னை அண்ணாநகரை வதிவிடமாகவும் கொண்ட தெய்வானை வினாசித்தம்பி அவர்கள் 25-08-2023 வெள்ளிக்கிழமை அன்று சென்னை அண்ணாநகரில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வினாசித்தம்பி(குகன் ஸ்ரோஸ் பளை) அவர்களின் அன்பு மனைவியும்,

குசேலா(லண்டன்), குகதாஸ்(இந்தியா), பிறேமதாஸ்(லண்டன்), கோகிலதாஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குணரத்தினம்(லண்டன்), லதா(இந்தியா), டயாதேவி(லண்டன்), காந்தரூபி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இளமாறன்- ஜனனிதா(லண்டன்), இந்துஜா- சுஜாகன்(லண்டன்), கஸ்தூரி- பிரகாசன்(கனடா), மகிழ்ராஜ்(இந்தியா), பிரதுஜா(லண்டன்), பிரதோஸ்(லண்டன்), பிருத்திகா(லண்டன்), நிதூஸ்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அபினயா(லண்டன்), அஞ்சலிகா(லண்டன்), ஆரியன்(கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான பாக்கியம், சிதம்பரப்பிள்ளை, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை, புஸ்பமலர், கனகசபை, குஞ்சுப்பிள்ளை, தம்பிராசா, தம்பிதுரை, செல்லையா மற்றும் மலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுரேஸ்குமார்(கனடா), சிவகுமார்(இலங்கை), நந்தகுமார்(லண்டன்), உதயகுமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா சென்னையில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குகதாஸ் - மகன்
மகிழ் - பேரன்
குணரத்தினம் - மருமகன்
பிறேம் - மகன்
கோகில் - மகன்
கஸ்தூரி- பிரகாசன் - பேத்தி

Summary

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 25 Sep, 2023