

திதி: 16-09-2025
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வேளச்சேரி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்கொண்டிருந்த தெட்சணாமூர்த்தி நிஷாந்த் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி
விண்ணுலகம் பார்ப்பதற்கு
விரைந்தோடிச் சென்றாய் ஐயா
எத்தனை ஆசைகள்! எத்தனை கனவுகள்!
எல்லாம் ஒரு நொடியில் கலைந்தே போனதய்யா
மீண்டும் மீண்டும் உந்தன் நினைவு வந்து
மீளாமல் தவிக்கின்றோம்
கண்பார்க்கும் இடமெல்லாம் பார்க்கின்றோம்
கண்முன்னே வாராயோ
பிஞ்சு மனங்கள் இரண்டு
வெம்புகின்றன தந்தை உன்னை எண்ணி
பஞ்சாய் துன்பம் விலகிட
என்று வருவாயோ எண்ணியே துடிக்கின்றோம்
உனை இழந்து நாம் இங்கு
உருக்குலைந்து போனோமே
ஆண்டுகள் இரண்டு ஆனபோதும்
ஆறவில்லை எம் துயரம் ஐயா
கண்முன்னே வாழ்ந்த காலம்
கனவாகப் போனாலும்
எம் உயிர் உள்ளவரை
உன் நினைவுகள்
எம் மூச்சுக் காற்றில் கலந்தே இருக்கும்
உந்தன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
மனைவி, பிள்ளைகள், தாய், சகோதர, சகோதரிகள்,
மாமா, மாமி, மைத்துனர்கள், மைத்துனிகள்,
மக்கள்,
மருமக்கள் மற்றும் உற்றார், உறவினர்கள், நண்பர்கள்
தொடர்புகளுக்கு
- Mobile : +14375452528