Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 JAN 1985
இறப்பு 09 SEP 2023
அமரர் தெட்சணாமூர்த்தி நிஷாந்த்
வயது 38
அமரர் தெட்சணாமூர்த்தி நிஷாந்த் 1985 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் கண்ணகைபுரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வேளச்சேரி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்கொண்டிருந்த தெட்சணாமூர்த்தி நிஷாந்த் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 28-08-2024

அன்பின் உருவம் நீ
அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தவன் நீ
அப்பாவின் அன்பை அறியாதவன் நீ
 இன்று அதையே உன் குழந்தைகளுக்கு தந்து விட்டு
அவசரமாய் சென்றுவிட்டாய்

கண் இமைக்கும் நொடியில்
காலனவன் அழைத்ததால்
கட்டிய கோட்டை எல்லாம்
கற்பனை ஆக்கிவிட்டு
 கட்டியவளையும் விட்டு விட்டு போய்விட்டாய் அன்று
கலங்கி நிற்கிறாள் அவள் இன்று
வருடம் ஒன்று கழிந்ததடா
வலிகள் இன்னும் குறையவில்லையடா
திரும்பத் திரும்ப கேட்டாலும்
திரும்பி வரமுடியாத தூரம் நீ சென்றாயடா

ஈன்றவள் காத்திருக்கிறாள்
 என்றாவது ஒரு நாள் வந்துவிடமாட்டாயா என்று
உடன்பிறப்புகள் தவிக்கின்றனர்
மறுபடியும் உதிரத்தால் ஒன்றுபட மாட்டாயா என்று

ஒரு ஆண்டு என்ன
ஓராயிரம் ஆண்டுகள் ஆனால் என்ன
கடலலைகள்போலே எம் மனதிலும்
உந்தன் நினைவலைகள் மோதி
எம்மை வாழ்ந்திட வைக்குமே

 மண்ணில் நாம் வாழும் வரை
 நம் மனதிலும் நீ இருப்பாய்
விண்ணில் நீ இருந்து
எம் வாழ்வில் விளக்காய் ஒளி கொடுப்பாய்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

அகாலமரணம் Sun, 10 Sep, 2023