கிளிநொச்சி உருத்திரபுரம் ஆனந்தம்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி கட்சன்வீதியை வசிப்பிடமாகவும், தற்போது பிரான்ஸ் Saint-Cyr-l'École ஐ வதிவிடமாகவும் கொண்ட தயாபரன் கமலவேணி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
உள்ளமுருகி எமை உயிரோடு
அரவணைத்த பண்புமிகு தெய்வமே!
பாசத்தின் உறைவிடமே
உமை பார்ப்பது இனி எக்காலம்?
காலங்கள் மாறினாலும்
கனவுகள் சென்றாலும் உம் கோலமுகமும்
குளிந்த நெடும் சிரிப்பும் மாறாது!
தெய்வத்துள் நீங்கள் நிறைந்து விட்டாலும்
வையத்துள் வாழும் நாங்கள் நித்தமும்
நினைத்தே வாழ்வோம்!
அன்பின் திருவுருவாய் எமது வழிகாட்டியாய்
எமது இதயங்களில் என்றும் அணையாத சுடராய்
என்றும் இருப்பாய் அம்மா!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 14-06-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை La Maison Des Associations Simone- Veil. 14 avenues Tom Morel, Saint-Cyr-l’École (78210) எனும் முகவரியில் நடைபெறும் அத்தருணம் அனைவரும் கலந்துக்கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அன்பான பேச்சாலும் என்றும் எம்மை அன்புடன் வரவேற்ற இனிய பாக்கியம் மாமியின் பாசமும், நேசம்மும் சேர்ந்து இறுதி நாள் வரை இன்முறுவலுடன் அனைவரையும் உபசரித்த எமது அன்பு வேணி மச்சாளின் பிரிவு எம்மை மிகுந்த...