Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 15 MAY 1971
இறப்பு 24 SEP 2023
அமரர் தயாநந்தினி சொனிலிஸ்ரன் (சுபா)
வயது 52
அமரர் தயாநந்தினி சொனிலிஸ்ரன் 1971 - 2023 Kokuvil, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தயாநந்தினி சொனிலிஸ்ரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.


அன்பு மனைவியே
பாசமிகு அம்மாவே
ஆருயிர் தங்கையே
ஆசை மைத்துனியே
இப்பூமியில் - நீங்கள்
இல்லை என்பதை எண்ணும்போது
இடிந்து எரியுது இதயம்!

அன்பு பொங்கும் உம் அழகு முகத்தை
இனி நாங்கள் என்று காண்போம்?
 தங்கச்சியே என்று நாங்கள் யாரை அழைப்போம்?

காலத்தால் எம்மைப் பிரிந்து
 கண்களில் நீர் மல்க வைத்து
 நாம் இங்கே தவித்து நிற்க
 எம்மை விட்டுப் போனதெங்கே?

நாட்கள் 31 சென்றாலும்
ஆறவில்லை மனது
மாதங்கள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 10 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.