யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தயாநந்தினி சொனிலிஸ்ரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
வானத்தில் நிலவாய்
வையகத்தில் தென்றலாய்
எங்கள் இதயத்தில்
என்றென்றும் வாழும் தாயே
நாம் வாழும் வரை
உங்கள் நினைவுகள் எம்முடன் வாழும்
அன்பு என்னும் அறிவை எமக்கு
ஊட்டி வளர்த்த அம்மாவே
உங்களை இழந்தோம் என்பதை
எம் மனம் ஏற்க மறுக்கிறது
மரணம் என்பது இயற்கைதான்
அதை ஏற்பது மனித இயல்புதான்
ஏனோ இதயம் வலிக்கிறது
அது ஏனென்று புரியவில்லையம்மா!
ஐயிரண்டு திங்கள் சுமந்து
அங்கமெல்லாம் நொந்து எம்மை
பெற்றெடுத்த தாயே உங்கள் நினைவுகள்
எங்கள் உள்ளத்தில் அணையாத தீபமம்மா!
கண்ணீர் நிறைந்த வலியோடும்
கனத்த மனதோடும் தாயே
உங்களுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறோம்!
எங்கள் குடும்பத்தினர் எல்லோராலும் “தங்கச்சி”
என அன்பாய் அழைக்கும் ஆணிவேரே
கண்மூடி முழிக்குமுன்னே எம்மைக் கடந்துவிட்டாய் ஒரு ஆண்டு!
என்றென்றும் எங்களுடன் இணைந்திருப்பீர்கள்
என எண்ணிலாக் கனவுகள் கண்டிருந்தோம்..!
இடை நடுவில் எம்மைத் தவிக்கவிட்டு ஏன்
தங்கை/மச்சாள் மறைந்து விட்டீர்கள்..?
விதி செய்த சதிதானே என்று எம் மனது
எண்ணினாலும் எம் இதயங்களில் என்றும் நீங்கள் தொடர்வீர்கள்!
கல்லறை வாழ்வில் நெடுங்காலம் சென்றாலும்
எங்கள் நெஞ்சங்களில் அழியாத ஓவியம் நீங்கள்
அன்னாரின் நினைவில் வாடும்
தாய், மாமி, கணவர், பிள்ளைகள்,
சகோதரர்கள், மைத்துனிகள்...
Rip