1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தயாளமணி கனகசிங்கம்
எட்டியாந்தோட்டை St.Mary தமிழ் வித்தியாலய முன்னாள் தலைமையாசிரியை
வயது 98
Tribute
20
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பளை, ஐக்கிய அமெரிக்கா Rochester ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தயாளமணி கனகசிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
குடும்பத்தின் குலவிளக்காய்
ஒளியேற்றிய தாயே
எங்கள் இதயங்களில்
கோயிலாய் வாழ்கின்ற அம்மாவே!
நீங்காது எம் மனதில் உங்கள்
நினைவு தாயே
நீங்கள் எம்மோடு வாழ்ந்திருந்த
காலமெல்லாம் பொற்காலம்!
அகவை ஒன்று அகன்றே நின்றாலும்
அழியாத நினைவலைகள்
எம் அகத்தில் நின்று ஆழத்திலே
வாட்டி வதைக்கின்றது அம்மா!
அன்பின் உருவான தாயே
எம் உயிரினுள் உயிராகி
உறவிலே கலந்து ஏற்றமுடன் நாம் வாழ
ஏணியாக இருந்திடுவீர் அம்மா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
உயிரிலும் மேலான உயர்திரு அதிபர் திருமதி கனகசிங்கம் அவர்கள் எட்டியாந்தோட்டை சென் மேரிஸ் பாடசாலையில் பல வருடங்களாக அதிபராக கடமை புரிந்து பல மாணவர்களின் எதிர்காலத்திற்காக பக்கபலமாக இருந்த அதிபர்...