யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட தவராஜா ராஜ்குமார் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 01-03-2023 புதன்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெறும், வீட்டுக்கிரியை 03-03-2023 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற இருப்பதால் அத்தருணம் எல்லோரும் அன்னாரின் ஆத்ம சாந்தி பிரத்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்துகொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்.