யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தவராஜா ராஜ்குமார் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 27-01-2026
உடன்பிறப்பே எங்கள்
உயிர்ச் சகோதரனே!
என்னுடன் பிறந்தவனே
என்னருமைச் சகோதரனே !
உன்னைத் தேடி எங்கள்
கண்கள் களைத்ததடா...
அமைதியின் அடைக்கலமாய்...
அன்பின் பிறப்பிடமாய்...
பாசத்தின் ஜோதியாய்...
நேசத்தின் ஒளியாய்...
திகழ்ந்த எம் சகோதரனே...!
உடல்கள் உயிரை பிரிந்தாலும்
உணர்வுடன் ஒன்றாகிப்போன
எம் உடன்பிறப்பே
ஆத்ம
சாந்திக்காகப் பிரார்த்திக்கும்
சகோதரர்கள், சகோதரி,
மனைவி,
பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்..
கரம்பிடித்தவளோடு வாழ்வில்
பாதியாய் பக்கபலமாய்
இருக்காது
பாதியிலே பரிதவிக்க விட்டு
மறைந்துபோன
காரணம் தான் என்ன ?
எங்கள் வாழ்நாள் முழுவதும் கூடவே
இருப்பேன்
என்று கூறியது
பொய்யாகிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் சகோதரா?
கண்பட்டுக் கலைந்து போனது
எமது வாழ்வின் நிஜங்கள்
காணாமல்
உமை மறைத்து
விதி செய்த சதிகள்!!
நாங்கள் உன்னை மறந்தால்
தானே
நினைப்பதற்கு
நினைவே என்றும்
நீங்கள் தான் அன்புத் தம்பி..
வானுலகம் சென்றாலும் எம்
வழித்துணையாவும் என்றும்
இருந்துவிடுவீர்கள் !!!