யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த தவராஜா ராஜ்குமார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 19/01/2024
எங்கள் எல்லோர் மனதிலும் என்றும்
அணையாத தீயச்சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கும்- தெய்வமே!
கட்டிய மனைவி கண்கலங்கி நிற்க
நீங்கள் வெகு தூரம் சென்றது ஏனோ
குடும்பத்தின் ஒளி விளக்காய்
மிளிர்ந்த எம் தெய்வமே!
ஆண்டு ஒன்று ஆனாலும்
நகராது உங்களது
திருமுகம் எம்மனதிலிருந்து
எமது வாழ்வின்
ஒளிவிளக்காய் விளங்கியவரே
கலங்கரையற்ற தோணியாய்
தவிக்கவிட்டு சென்றுவிட்டீர்களே
நினைவில், நித்திரையில், எங்கள் உணர்வில்
உள்ளத்தில் எப்போதும் - நீ
கனவில், கற்பனையில்
எங்கள் கண்பார்க்கும் இடமெல்லாம் - நீ
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக எப்போதும்
எம் இதயத்தில் தெய்வமாய் சுமந்து நிற்போம்.
அன்னாரின் மதியபோசன நிகழ்வு 19-01-2024 வெள்ளிக்கிழமை அன்று கந்தரோடை அவரது இல்லத்தில் நடைபெறும்.