மலேசியா கோலாலம்பூரை பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவமணி அரியரட்ணம் அவர்களின் 38ம் ஆண்டு நினைவஞ்சலி.
தை அமாவாசை திதி:- 18/01/2025
இல்லை இனி இல்லை அம்மா....
எங்கள் குடும்பத்தின் பாசவிளக்கே!
அம்மா 38 ஆண்டுகள்
உங்களின் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம் நாங்களிங்கே!
கனவுகள் பல கண்டு
ஆசிகளுடன் எம்மைப் பிரிந்த
எம் இனிய அன்னையே!
வருடங்கள் பல உருண்டோடினாலும்- உங்கள்
உருவம் கண்ணிலே நிற்குதம்மா
எத்தனை உறவுகள் இருந்தபோதிலும்
அம்மா என்ற உறவுக்கு ஈடாகாது!
உங்களோடு வாழ்ந்த அந்த காலங்கள்
எல்லாம் பொற் காலங்கள் தான்!
ஆண்டு பல உருண்டு சென்றாலும்
உங்களை எங்கள் உயிர் உள்ளவரை
தெய்வமாக பூசிப்போம்.!!
என்னருமை அம்மா! கூப்பிட்டோம் குரல் தருவீர்
வாடி விட்ட பயிர் நாங்கள்
வான்முகிலே வாய் திறவாய் ஆடிவிட்ட பம்பரமே!
நூலறுந்த பட்டமதோ,
இத்தரையில் இனித்த அன்பு!
பாதியிலே முடிந்தது ஏனோ!
முல்லையிலும் வெள்ளையென உள்ளமுள்ள அம்மா!
இல்லை இனி இல்லை என ஆன போது
இன்று தாயில்லா பிள்ளை ஆனோம்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
உங்கள் பிரிவால் தவிக்கும்
மக்கள், மருமக்கள் மற்றும் பேரப்பிள்ளைகள்...