37ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி : 29/01/2025 தை அமாவாசை
மலேசியா கோலாலம்பூரை பிறப்பிடமாகவும், உரும்பிராயை வதிவிடமாகவும் கொண்டிருந்த தவமணி அரியரட்ணம் அவர்களின் 37ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
ஆண்டுகள் 37 கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை அம்மாவின் அன்பு முகம்!
உலகமும் நிஜமில்லை,
உறவுகளும்
நிஜமில்லை என்றுணர்ந்தோம்
உங்களின் இழப்பால்..
என்ன செய்வது என்று மனம் ஏங்குகிறது!
அம்மா நீங்கள் மண்ணில் இருந்து
மறைந்து 37 ஆண்டுகள் ஆனாலும்
நீங்கள் எங்கள் நெஞ்சில்
நிலையாய்
என்றும் நிறைந்துள்ளீர்கள் ...
ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும்
அம்மா உங்கள் அன்பிற்க்கு ஈடாகுமா...
பிள்ளைகளும், மருமக்களும், பேரப்பிள்ளைகளும்,
உங்கள் ஆத்மாவின் சாந்தி வேண்டி
இறைவனை எப்பொதும் பிராத்திப்போம்!!!
தகவல்:
தயாளினி பிரபாகரன்(இளையமகள்-பிரித்தானியா)