5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தர்மிளா பிரதீப்
MSc- docent Hogeschool Rotterdam
வயது 31
Tribute
59
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Breda வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மிளா பிரதீப் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 08-01-2026
இன்று வரை நாம் ஐந்து வருடங்கள் நகர்ந்தும்
உன்னோடு வாழ்ந்த நினைவில்
ஒரு துளியும் மறக்கவில்லை..
கற்பனை உலகில் நாட்களை நகர்த்தி
ஜடமாய் நகர்கின்றோம் ஒவ்வொரு நொடியும்
வானச் சந்திரன் சட்டென்றே
மண்ணில் விழுந்து மறைந்ததுபோல்
கான மயிலே கண்மணியே
நீ கானல் நீராய்ப் போயினையோ?
வலிகள் தொடரும் போதும்
வழிகளை வலிமையாக்கி வாழ்கின்றோம்
உன் நினைவோடே...!
என்றும் உன் ஆத்மா சாந்திக்காக
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்