யாழ். நெடுந்தீவு மேற்கைப் பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Breda வை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மிளா பிரதீப் அவர்கள் 04-01-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம்(மனேச்சர் நெடுந்தீவு), முத்துப்பிள்ளை தம்பதிகள், சின்னத்தம்பி(ஒவசியர்) செல்லம்மா தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,
நிமலசோதிநாதன்(சோதி) லோகேஸ்வரி தம்பதிகளின் அருமை மகளும், கிருஷ்ணானந்தன் இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பிரதீப் அவர்களின் அன்பு மனைவியும்,
சஷ்வினி அவர்களின் ஆருயிர்த் தாயாரும்,
கோகுலன் அவர்களின் அருமைத் தங்கையும்,
சிந்தியா, பாமினி, கபில் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2021 புதன்கிழமை அன்று நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக சொந்தபந்தம் உட்பட்ட முக்கியமான 100 நபர்கள் மட்டுமே பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம். அன்னாரின் இறுதிக்கிரியையில் பங்குகொள்ளும் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை அறியத்தருக்கின்றோம்.