Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 20 APR 1989
மறைவு 04 JAN 2021
அமரர் தர்மிளா பிரதீப்
MSc- docent Hogeschool Rotterdam
வயது 31
அமரர் தர்மிளா பிரதீப் 1989 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 57 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி: 13-01-2023

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பூர்வீகமாகவும், யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Breda வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மிளா பிரதீப் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பால் எமை ஆண்ட அன்னையே
அன்றொரு நாள் ஒரு வார்த்தை சொல்லாமல்
எமை விட்டுப் பிரிந்து போய்
இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆனதா...
இன்னும் ஆறவில்லை எம் துயரம் தாயே…

துன்பம் ஏதும் இல்லாமல் கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உங்கள் மலர்ந்த முகத்துடன் எங்களை உங்கள்
கண் இமைக்குள் வைத்து நாம் வாழ
வழி அமைத்துக் கொடுத்தீர்கள் அம்மா!

அன்பைச் சுமந்து அறிவைச் சுமந்து
நல்ல பண்பைச் சுமந்து
ஈடில்லாப் பாசம் சுமந்து
நீங்கள் எமக்களித்த இன்பமெல்லாம்
நினைத்து முடிக்குமுன்பே
நிர்மூலமானதென்ன?

ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்திவிட்டு
மீளாத்துயில் கொண்ட எம் அன்புத் தாயே
உங்கள் ஆத்மா சாந்தி அடைய தினமும்
இறைவனை பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 07 Jan, 2021