வவுனியா இறம்பைகுளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Franceville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மரத்தினம் தர்மசெந்தூர்வாசன் அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
என் அருமைக் கணவரே!
என்னையும் என் பிள்ளையையும்
தவிக்கவிட்டு எங்கு சென்றாயோ!
வானடைந்து 31 நாள் ஆனாலும்
உங்கள் பிரிவுத்துயர் ஆறாது
நீங்கள் என்னைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் ஆசைமுகம் என்
நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த
நாட்கள்
திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறேன்..
என் வாழ்நாள் முழுவதும்
கூடவே இருப்பேன் என்று கூறியது
பொய்யாக்கிப் போனதே- இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!
கனவாகிப் போனது
என் இனிய வாழ்க்கை
நினைவாக வாழுகிறீர்
நெஞ்சக் கோயிலிலே!
மங்காத புகழுடன் விண்ணகம்
சென்றுவிட்ட எமது அருமை தந்தையே....!
உங்கள் பிரிவு தச
காலங்கள் கடந்தோடினாலும்
கணங்கள் பல சென்றாலும்
யுகங்கள் பல கடந்தாலும்
உங்கள் கண்ணியமும்
உங்கள் பொன் முகமும்
என்றென்றும்
இந்த தரணியில்
நிலைத்திருக்கும்..!
இருளில் ஒளி தரும்
சூரியன் போல்
தனிமையில்
நம்மைக்
காக்கும் காவலன் போல்
துன்பம் வரும்போது
கண்ணை
இமை காப்பது போல்
காற்றினால்
எங்கள் சுவாசத்தில் கலந்து
எம்முடன் என்றுமே வாழ்கிறாய்..!
கடலுடன் என்றுமே வாழும்
அலைகள் போல்
எமது உயிரில் கலந்த உறவே..!
உங்கள் ஞாபகங்கள்
வானத்தில் உள்ள
மேகம் போல் என்றுமே அழியாது,
எமது உயிரே..!
அன்னாரின் வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 17-05-2023 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் “அன்னாரது இல்லத்தில்” நடைபெறவிருப்பதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகைதந்து
அன்னாரின் ஆத்ம சாந்திப்பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல.32/18,
அன்னை திரேசா வீதி,
(நாகபூசணி அம்மன் கோவில் அருகாமை)
இறம்பைக்குளம்,
வவுனியா.