வவுனியா இறம்பைகுளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Franconville ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மரத்தினம் தர்மசெந்தூர்வாசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:07/05/2024.
அறிவூட்டி சீராட்டி வளர்த்த அப்பாவே!
அன்பான அறிவும் பாசமும் தந்து
அரவணைத்து மகிழ்ந்தாயே
பொன்ணை வாழ்வு தனை
போற்றி வளர்த்த அப்பாவே!
உங்களோட மட்டுமல்ல
உங்கள்
நினைவுகளோடும்
நாம் வாழ்ந்த
நாட்களை யார் மறப்பார்!
எம்மையெல்லாம் தவிக்கவிட்டுச்
சென்று ஓராண்டு காலமாகிறதே!
உங்களை பிரிந்தே என்
உள்ளம்
வாடுதே - பிரிவின்
தூரம் அறிந்தும்
உங்களைத்
துரத்தித் தேடுதே..!
பாதிவழி வாழ்விலே ஏனோ நீர்
பரலோகம் புகுந்தாய்
பக்கத்தில்
நீங்கள் இருப்பது போல் நினைப்புடனே
பகல் இரவைக் - கடக்குதையா
நேற்றுவரை நீங்கள் எம்முடன் வாழ்ந்து
நிறைவு கண்டதெல்லாம்
நேற்றோடு
போயிற்று - உங்கள்
நினைவொன்றே
என் வாழ்வாச்சு
என்
அருமைக் கணவரே..!
என்னை தவிக்கவிட்டு எங்கு சென்றாயோ..!
வானடைந்து ஆண்டு ஒன்று
ஆனாலும்
உம் பிரிவுத்துயர்
ஆறாது
நீங்கள் என்னைவிட்டு
நீண்டதூரம் சென்றாலும்
உம்
ஆசைமுகம் என் நெஞ்சில்
நிலைத்திருக்கும்
உங்களோடு
வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா
என்று எண்ணித் துடிக்கிறேன்..!
என் வாழ்நாள் முழுவதும்
கூடவே
இருப்பேன் என்று கூறியது
பொய்யாக்கிப் போனதே-
இன்று
தனிக்க விட்டு சென்று விட்டீரே!
என் அன்புக் கணவரே!
கனவாகிப்
போனது என் இனிய வாழ்க்கை..!
உங்கள் நினைவுகளுடன்வாழும்
உன் மனைவி, பிள்ளைகள்..!