 
                     
        யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தர்மலிங்கம் சசிதரன் பாபு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அழகன் முருகன் என்று
அன்றைய இலக்கியங்கள் பேசும்…
இன்றளவும் எங்கள் இதயங்களும் பேசும்..
அந்த வேல் ஏந்திய வேலவன் போலவே …
செந்தமிழோடு என்றும் இணைந்திருந்து…
சிரிப்பழகால், அறிவால், ஆற்றலால்...
 எங்கள் இதயங்களில் தங்கிய பாபுவே..!
வீரம்,விருந்தோம்பல்,விளையாட்டு எல்லாம்
 எங்கள் சொத்தென்னும் ஈழத்தேசத்தில்…
 இரத்தத்தில் அதைச் சுமந்த நேசனே..!
 இன்றும் உன் காலடிக்காய்க் காத்திருக்கும்…
 மண்ணின் ஏக்கம் உனக்குப் புரிகிறதா..?
அன்பு மனங்களின் தாகம் தெரிகிறதா?
இறப்பென்பது மறுபடி பிறப்புக்கு என்றே…
படித்ததை நினைத்துக் காத்திருப்போம்…
மறவனே மறுபடி உன் வருகைக்காக..!
மறப்போமா உனை மறப்போமா…
மானம் சுமந்த வேங்கை நீ…
மரணத்தாலா மறக்கடிக்கப் படுவாய்…?
நெஞ்சில் அழியா நினைவுகளுடன்,
அன்புச் சகோதரி குடும்பத்தினர் ,
 பாசமிகு சகோதரர்
குடும்பத்தினர்,
யங்ரோயல் விளையாட்டுக் கழக வீரர்கள்
மற்றும் உறவினர்கள், நண்பர்கள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
 
                     
                         
                         
                         
                         
                             
                     
                     
                     
                     
                     
                    
பாபு அவர்களின் ஆத்மாஇறைவனடி சேரவும் அவர் குடும்பத்தார் அறுதல் பெறவும் இறைவன் துண வேண்டி எனது கண்ணிரைக் காணிக்கையாகுக்கின்றேன்