Clicky

பிறப்பு 27 MAY 1944
இறப்பு 21 MAR 2020
அமரர் தர்மலிங்கம் பராசக்தி
வயது 75
அமரர் தர்மலிங்கம் பராசக்தி 1944 - 2020 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Ratha England 21 MAR 2020 United Kingdom

அன்பு பாராட்டி , கவலையுற்ற பொழுது ஒத்தடம் தந்து அரவணைத்து நோயுற்ற பொழுது பெற்ற தாயினை போல் பாதுகாத்து கடவுளுக்கு செய்ய வேண்டிய பூசைகள்,நேர்த்திகள் செய்வதில் பெரிய மச்சாளுக்கு ஈடாக யார் இருக்கிறார்கள் ஒரு பொழுதும் நீங்கள் கோபம் அடைத்ததோ சினந்ததோ நான் பார்க்கவில்லை, நீங்கள் ஒரு உத்தமி அக்கா செல்லமாக எல்லோரும் அழைப்பது போல் நானும் உங்களை அக்கா, அக்கா என்று செல்லமாக அழைப்பேனே, நீங்கள் ,அதற்கும் மேலாக ஒரு தாய் தன் மகளை பாதுகாப்பது போல் நான் நோயுற்ற போது கண்ணை இமை காப்பது போல் பாதுகாத்தீர்களே எனக்கு புத்திமதி பல கூறி ஆறுதல் வார்த்தைகள் பல கூறி வந்தீர்களே நான் சுகம் அடைய முன் ஏன் 'அக்கா' எல்லாவற்றையும் பாதியில் விட்டு சென்றீர்கள்! அக்கா, உங்கள் அடக்கத்துடன் கூடிய அமைதியான பண்பிணையும், மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் போது உள்ள பக்குவதினையம் ,உங்கள் புத்தி கூர்மையினையும் கண்டு பல தடவைகள் வியந்துள்ளோம் ! அக்கா, எங்களுக்கு எல்லாம் கலங்கரை விளக்காக திகழ்த்தீர்களே! நீங்கள் இன்று வீடு வருவீர்கள்....... கன க்க கதைக்க, கேட்க என்று ஆவலுடன் காத்திருந்த சமயம் நீங்கள் எங்களை எல்லாம் விட்டு விட்டு சென்று விடடீர்களே! ஏற்க முடியுதில்லை ... அக்கா! உங்கள் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்!