

யாழ். பண்டத்தரிப்பு சில்லாலை தெற்க்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் பராசக்தி அவர்கள் 21-03-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
மதியழகன், விஜயகுமாரி, புஸ்பகுமாரி, மகேந்திரன், அஜேந்திரன், சசிகலா, தாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஆறுமுகம், மகாலட்சுமி, இராசலட்சுமி, இரத்தினசிங்கம், மகேஸ்வரி, பரமேஸ்வரி, துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான லோகநாதன், புஸ்பகுணம் மற்றும் நாகேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பாலஸ்கந்தன், அருந்ததி, கனகலிங்கம், சதீஸ்வரி, சுதர்சனா, இலம்போதரன், தனுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டிலக்ஷன், தரண்ஜா, அபினயா, சர்மிலன், சாயகி, ஆரபி, கீர்த்தனா, அபிரன், கேசினி, கேசிகன், பானுஷன், சதுஷன், அஸ்மியன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
தர்மியன் அவர்களின் ஆசைப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-03-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் விளாவெளி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.