7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
1
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், அத்தியடியை வதிவிடமாகவும், பிரான்ஸ் Gagny ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தருமலிங்கம் கந்தையா அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஏழு ஆனாலும்
மனம் ஆற மறுக்கிறது
சிரித்த முகத்தோடும் செயற்திறன்
தன்னோடும் செம்மையாய்
வாழ்ந்த அப்பா!
ஆண்டு ஏழு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள்
நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணி போல்
எம்மைக் காத்த அன்புத் தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
விதித்ததோர் விதியதால்
விண்ணகம் சென்றதைப்
பொறுத்திட முடியுமோ தான்?
அப்பா, உங்கள் அன்பு
முகம் மறைந்தாலும் அழியாது
நினைவலைகள்! பாசத்தின்
பிறப்பிடமாய் பாரினிலே!
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!
தகவல்:
குடும்பத்தினர்