Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 18 JUL 1962
மறைவு 06 JAN 2023
அமரர் தர்மராஜா சிவமலர் 1962 - 2023 சுன்னாகம், யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். சுன்னாகம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கோயிலாக்கண்டி, பிரான்ஸ் sevran ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா சிவமலர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் துடக்குகழிவு 03-02-2023 வெள்ளிக்கிழமையும், வீட்டு கிருத்தியம் 05-02-2023 ஞாயிற்றுக்கிழமையும் அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை நடைபெறும். அதனைத்தொடர்ந்து நடைபெறும் 31ம் நாள் நினைவஞ்சலியும், மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் அன்புடன் அழைக்கின்றோம்

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.