Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மகிழ்வில் 10 AUG 1998
உணர்வில் 02 JUN 2024
அமரர் ஜெயகுமார் தனோஷன்
Graduated from university of Toronto and Centennial College - Old Student
வயது 25
அமரர் ஜெயகுமார் தனோஷன் 1998 - 2024 Markham, Canada Canada
Tribute 46 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கனடா Markham ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயகுமார் தனோஷன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

அன்பு மகனே !
 கண்ணீரில் காவியம் எழுத நினைக்கின்றேன் முடியவில்லை
 காலம் விரைவாக போகிறது என்கின்றனர்
 எனக்கு அப்படித் தோன்றவில்லை
 எனது உலகம் செயற்பாட்டை இழந்து இரண்டு ஆண்டுகள்

 ஓயாமல் ஓடிக் கொண்டிருக்கும்
ஓட்டத்தில்
 ஒப்புக்காக நானும்
சேர்ந்து ஓடுவது கொடுமையாக உள்ளது

 ஆயிரம் தடவையாவது அந்த நாளை
அசை போட்டுப் பார்த்திருப்பேன்
உனது ஆத்மா உணர்த்திய அறிகுறியை
தவற விட்டு நீ பிரிந்த
அந்த கணப்பொழுதை
தடுத்திருக்க முடிந்திருக்குமோ என்று

காலம் காயம் ஆற்றும் என்கின்றனர்
 ஆனால் மகனே நீ தனியே சென்று விடவில்லையே
என்னில் ஒரு பகுதியை அல்லவா
எடுத்துச் சென்று விட்டாய்

ஒவ்வொரு விடியற் பொழுதிலும் கண் திறக்கும் போதும்
 உன் வெற்றிடம் உணர்த்தும் நிதர்சனம்
 நெஞ்சில் வலிக்கும் தீராத சோகமும்
  நீ முந்தி போனது நியாயம் இல்லையே
 நான் முந்தி போகவே யோகம் இல்லையே.

 we miss you more than words can say

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 06 Jun, 2024