Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மகிழ்வில் 10 AUG 1998
உணர்வில் 02 JUN 2024
அமரர் ஜெயகுமார் தனோஷன்
Graduated from university of Toronto and Centennial College - Old Student
வயது 25
அமரர் ஜெயகுமார் தனோஷன் 1998 - 2024 Markham, Canada Canada
Tribute 41 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கனடா Markham ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜெயகுமார் தனோஷன்  அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 22-05-2025

தரணியில் தவமாய் இருந்து
பெற்ற தவப்புதல்வன் நீ...
உன் தந்தை நோயுற்று இருந்த வேளையில்
அவர் அருகிலிருந்து ஒரு நிமிடம்
நகராமல் கவனித்த அன்புச்செல்வன் நீ...
தங்கைக்கு ஒரே தமையனாய் இருந்து
வழிகாட்டிய மூத்தவன் நீ...
நண்பர்கள் மத்தியில் இப்படி ஒரு நண்பன்
 இனி எங்கள் வாழ்வில் கிடைக்கமாட்டானென
கலங்கவைத்த நல்லவன் நீ...
பக்கத்து வீட்டுக்காரருக்கோ
பாசக்கார தம்பி நீ...
உற்றாருக்கு அவர்கள் குடும்பத்தில் ஒருவன் நீ...
ஆருயிர் தோழியின் ஆசைக் கனவுகளை
இன்று மறந்தாய் நீ...
தாமதமாகத்தான் வருவேன் என்று
நீ சொன்னதை நம்பி
வாசலை பார்த்தபடி இன்றுவரை உன் தாய்... 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Thu, 06 Jun, 2024