Clicky

பிறப்பு 02 OCT 1937
இறப்பு 04 DEC 2020
அமரர் தங்கவடிவேல் சுப்பையா
ஓய்வுபெற்ற தபாலதிபர், அஞ்சல் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர் சங்கத்தின் தமிழ்ச்சங்க ஸ்தாபகர், அதன் ஆரம்ப காலத்தலைவர், Retired Postmaster, Founder and Chairman of Tamil Trade Union of Postal and Telecommunication, SriLanka
வயது 83
அமரர் தங்கவடிவேல் சுப்பையா 1937 - 2020 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Sivam family 06 DEC 2020 United States

நன்மை தீமை பேசிட என்று சொந்தம் சொல்லி இருந்தவர் நால்வர், அன்னை தந்தைக் கிணையாய் எமை அன்புடனே சீராட்டும் சீனியப்பா சீனியம்மா, பெயருக்கேற்ற இனிமை கொண்டே எம்மில் வாஞ்சை கொண்ட அன்பில் எட்டி எட்டி மிதித்துக் கொண்டு யாழில் இருந்து ஊருக்கு வருவார். தந்தை அருகில் இல்லாக் குறைக்கு தன்னால் முடிந்த கவனிப்பு இருக்கும், எம் அன்னை தந்தை திருமண பந்தம் எருவாய் நின்று இணைத்தவர் அவரே, சின்னவள் எங்கள் ராசாத்தி என்றும் சிவத்தின் பிள்ளைகள் நாங்கள் என்றும் தனிக்கவனம் எம்முள் கொண்டார். அத்தனை அறிவும் கொண்டவர் அவரே, அலசிப் பார்ப்பதில் அத்தனை இன்பம், பொது அறிவும் புதுமையாய் எம் புத்தக அறிவுள் புகுந்து கொள்ளும், கடிகாரம் போல் ஓய்ந்திடா உழைப்பு கண் முன் எமக்கு காட்டியே வாழ்ந்தார், நல்லூரான் அருள் எமைக் காக்க என்றே நாளும் பொழுதும் வேண்டி நிற்பார். இறைவன் திருவடியில் சாந்தி பெறவே இருகரம் கூப்பி இரந்து நின்று இதயம் கனக்க விடை தருகிறோம், போய்வாருங்கள் சீனியப்பா ஓம் சாந்தி சாந்தி சாந்தி ……. - பெறாமக்கள்

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 05 Dec, 2020