மரண அறிவித்தல்
தோற்றம் 14 APR 1957
மறைவு 14 OCT 2021
திருமதி தனேந்திரன் நீலாதேவி
வயது 64
திருமதி தனேந்திரன் நீலாதேவி 1957 - 2021 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கொட்டடி சீனிவாசகம் வீதியை வதிவிடமாகவும் கொண்ட தனேந்திரன் நீலாதேவி அவர்கள் 14-10-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, கண்மணி தம்பதிகளின் பாசமிகு மகளும், நாகலிங்கம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தனேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும், 

லாவண்யா, துரிதா(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ரமேஸ்(இத்தாலி), பிரபாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன், கமலாதேவி, விஜயலட்சுமி, புஸ்பராணி, காலஞ்சென்ற செல்லராணி, உதயராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற குணரெட்ணம், பத்மநாதன், இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கெளசி, ஹிசாந்(ஏஞ்சல் பாடசாலை), அதிஷ்ரா, டினுசன், ஹரிஸ், ஜஸ்வின், மித்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-10-2021 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வில்லுன்றி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தனேந்திரன் - கணவர்