யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட தனலெட்சுமி தம்பிராசா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
"நன்றி மறப்பது நன்றன்று" என்ற நல்வாக்கிற்கிணங்க அன்பின் அடித்தளமாய், பாசத்தின் உறைவிடமாய், பண்பின் சிகரமாய் எம் வாழ்வின் ஒளிவிளக்காய் திகழ்ந்து இன்று வானுறையும் தெய்வத்துள் சங்கமித்த தனலெட்சுமி தம்பிராசி துருவல் 16-01-2025 அன்று சிவபதமடைந்து கேட்டவுடன் எமது இல்லத்திற்கு, இங்கும் வந்தும்வெளிநாடுகளில் இருந்தும் நேரில் வருகைதந்து ஆறுதலும் தேறுதலும் அளித்த அன்பு உறவுகளுக்கும் தொலைபேசி, முகநூல் மற்றும் மின்னஞ்சல், RIB மூலம் அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும் மலர்வளையங்களை அனுப்பிவைத்து மலர் அஞ்சலி செலுத்தியோருக்கும், துண்டுப் பிரசுரம் அனுப்பியவர்களுக்கும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், நேரடியாக கலந்துகொள்ள முடியாமல் அனுதாபங்களை தெரிவித்தோர்களுக்கும் 31ம் நாள் அந்தியேட்டி கிரியை மற்றும் ஆத்மசாந்தி பிரார்த்தனைகளில் கலந்து சிறப்பித்த உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் இன்னும் பல வழிகளில் எம்மோடு இணைந்த அனைவருக்கும் எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.