யாழ். கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் நல்லையா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
உங்கள் அரவணைப்பின்றித்
தவிக்கின்றோம்
நாங்களிங்கே..!
உங்களையே உலகமென
உறுதியாய்
நாமிருக்கஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
இல்லறக் கடமையெல்லாம்
இனிதே
முடித்தீரென்று
தன்னடியில்
அமைதிகொள்ள
இறைவன் அழைத்தானோ!
எங்கள் உயிரின் சகோதரரே
எதற்காக மரித்தீர் மாமவே!!!
உயிர் வாழ்ந்தீரே நமக்காக
உயிர் போனதே எதற்காக..
இப்போ நம்மோடு நீ இல்லயே
போகும்
இடமெல்லாம் உன் நினைவே...
என்றும் உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 18-10-2025 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை Sri Sathya Sai Baba Centre, 5321 Finch Ave E, Scarborough, ON M1S 5W2, Canada எனும் முகவரியில் நடைபெறும்.
I am so sorry to hear the bad news of loss of Thanabal whom I met in Scarborough two years ago when he attended my father's funeral service. My prayers are always with his family members in this...