3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலசிங்கம் இளங்கீரன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி்.
திதி: 23-02-2023
தந்தையே எங்கள் ஆருயிர் அப்பாவே
விண்ணையே நோக்கி நீ விரைந்திட்டதால்
விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது
கண்ணின் மணிபோல் எம்மை காத்து நின்றாயப்பா!
இருளினுள் மறையும் நிழலும்
ஒளிவர உயிர்த்துக்கொள்ளும்
மறைந்து நான்கு வருடம் போயும்
மறுபடி வராததேனோ?
உம் உறவுகள் நாம் இங்கு
கதி கலங்கி நிற்போம் என்று
ஒரு கணம் நினைத்துப் பார்க்க
உமக்கு மனம் வரவில்லையோ?
காலன் அவன் ஆசை கொண்டு
கவர்ந்து சென்றானோ உம் உயிர்தனை
காலம் காலமாய் உம் நினைவால்
காத்து நிற்கின்றோம்...
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்