8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தனபாலன் நாகேஸ்வரி
விண்ணில்
- 26 JUN 2017
Tribute
9
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். சாவகச்சேரி நுணாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தனபாலன் நாகேஸ்வரி அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா உங்கள் குரல் கேட்காது
எட்டு வருடங்கள் ஆகிவிட்டன
அரவணைத்த உங்கள் பாசக் கைகள் எங்கே!!
அள்ளித் தந்த அந்த அமிர்த சுவைகள் எங்கே
முத்தமிட்ட உங்கள் மூச்சு எங்கே
முடிச்சு வைத்த பாசக் கதைகள் எங்கே
அம்மா நாம் கண் திறந்த போது உங்கள்
திருமுகத்தை கண்டு சிரித்தோம் அன்று
உங்கள் கண்கள் திறக்க மறுத்த போது
எங்கள் வாழ்க்கையும் இருண்டு விட்டதம்மா
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்
ஆதரிக்க யாருமில்லை
ஆண்டு பல உருண்டு சென்றாலும்
உங்களை எங்கள் உயிர் உள்ளவரை
தெய்வமாக பூசிப்போம்.!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
You are always in our hearts Annai, Anusha,Hari & family