யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா சிற்றம்பலம் அவர்களின் நன்றி நவிலல்.
எமது குடும்பத் தலைவர் மறைவுச்செய்தி கேட்டு அனுதாபங்களை நேரிலும், தொலைபேசி மற்றும் இணையத் தளங்கள் மூலமாகவும் தெரிவித்தவர்களுக்கும், இறுதிக் கிரியையில் பங்கு பற்றியவர்களுக்கும் உதவியவர்களுக்கும், உணவு மற்றும் மலர் வளையம் வழங்கியவர்களுக்கும், இறுதிக்கிரியை அந்தியேட்டி கிரியைகள் நடாத்திய குருமார்களுக்கும் எமது இதயங்கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.