Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 MAR 1946
இறப்பு 11 MAR 2022
அமரர் தம்பிஐயா சிற்றம்பலம்
வயது 76
அமரர் தம்பிஐயா சிற்றம்பலம் 1946 - 2022 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Harrow வை வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா சிற்றம்பலம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள்
 அடைபட்டு இன்புற்று இருந்த
 இனிய வசந்த காலம் எங்கள்
இதயத்துள் இன்பவலியாய் எமக்குள்ளே
ஆன்மாவை அச்சுறுத்த ஏன்?
எங்கே? பிரிந்து போனீர்கள்!

நீ இல்லாத நாமும்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும்
 விரல்கள் எரிகிறது
 தன்னை உருக்கி பிறருக்கு
ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...

பிள்ளைகளும் மனைவியும்
உமை நினைத்து வாடிடவே
போனது எங்கேயோ ?
உறவுகளைப் பிரிந்து!

அப்பா என்று அழைக்க
நீங்கள் இல்லையே அடி மனதில்
வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள்
நினைவுகளில் கலந்தே இருக்கும்
உங்கள் நினைவுகள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்! 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Tue, 15 Mar, 2022
நன்றி நவிலல் Sat, 09 Apr, 2022