4ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி
(யேசு)
வயது 70

அமரர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி
1950 -
2021
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
47
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். புங்குடுதீவு கிழக்கு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், முல்லைதீவு முத்து ஐயன் கட்டு வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Sarcelles ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு நான்கு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள்!
நேற்றுப் போல் எல்லாம் எம்
நெஞ்சோடு நினைவிருக்க
காற்றுப் போல் கண்களுக்கு
தோன்றாமல் நிற்கின்றீர்
தோற்றுப் போனது எம்
எதிர்பார்ப்பு எல்லாம் தான்
எம்மோடு இயந்திரமாய் இயங்கிய
இனிய ஜீவன் அவர் இன்று எம்மோடு இல்லை
ஆயிரமாயிரம் வினாக்கள்
விடைசொல்ல ஒரு நிமிடம் வாரீரோ...?
விளையாட்டாகினும் கூட
சில மணித்துளிகள்
விழி அசைக்க மாட்டீரோ...?
காலங்கள் பல சென்றாலும்
கடைசி வரை உங்கள் நினைவு
எம் நெஞ்சை விட்டு அகலாது!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்